டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வந்த நிலையில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்டு, இந்தியாவின் பெருமை என்று தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிப்புகளில் படித்து வரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
இந்த ”புதுமை பெண் திட்டம்” இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து வரவேற்பு மற்றும் பாராட்டு தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும்” என தெரிவித்தார்.
இதையடுத்து, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்று பார்வையிட்ட ஜெர்ரிவால், அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ் நாட்டின் பெருமை மட்டுமல்ல இந்தியாவின் பெருமை என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவர் அங்குள்ள ஏட்டில் பச்சை மையிட்ட பேனாவினால் எழுதியது குறிப்பிடத்தக்கது.