Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம்! மரண இழப்பீடு 2 லட்சமாக உயர்வு! - தமிழக அரசு அரசாணை!

Advertiesment
தமிழக அரசு

Prasanth K

, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (15:40 IST)

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணத் தொகை மற்றும் உதவித் தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

 

வேளாண்மையை ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வரும் விவசாயிகள், வேளாண்மை தொழிலாளர்கள் நலனுக்காக முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதன்மூலமாக விவசாயிகளுக்கு பல்வேறு வகையான விபத்து மற்றும் உயிரிழப்புகளுக்கு நிவாரணம், உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் அந்த தொகையை உயர்த்தி தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிலமற்ற வேளாண்மை தொழிலாளர்கள் விபத்து உள்ளிட்டவற்றில் இறந்தால் அளிக்கக்கூடிய இழப்பீட்டு தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இயற்கையாக உயிரிழக்கும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இயற்கை மரண நிதியுதவி ரூ.30 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

மேலும் விபத்தில் உடல் உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 லட்சமாகவும், இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்கான செலவின நிதி ரூ10 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'விஜய்யின் உரை பழைய பஞ்சாங்கம்': அண்ணாமலை விமர்சனம்