அரசியல் தொண்டும் கலைத் தொண்டும் மென்மேலும் சிறக்கட்டும்: கமல்ஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து..!

Mahendran
வெள்ளி, 7 நவம்பர் 2025 (10:20 IST)
உலகநாயகன் நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் ராஜ்யசபா எம்பி கமல்ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடு வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
 
மேலும் தமிழக மற்றும் தேசிய அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
 
பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும்  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் - கலைஞானி கமல்ஹாசன்  அவர்களுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்!
 
நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் இளம்பெண் கடத்தப்படவே இல்லையா? மாநகர காவல் ஆணையர் விளக்கம்..!

தேர்தலை திருடி பிரதமர் ஆனவர் மோடி.. இதை Gen Z இளைஞர்களுக்கு புரிய வைப்போம்: ராகுல் காந்தி

டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் கிளம்ப முடியாமல் தவிப்பு.. என்ன காரணம்?

பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள தெருநாய்களை அகற்றுங்கள்: கோர்ட் உத்தரவு..!

அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம் இதுதான்: தமிழக அரசை விமர்சித்த சு வெங்கடேசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments