தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், நெல்லை தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால் பதவிகள் பறிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
"உடன்பிறப்பே வா" என்ற நிகழ்ச்சியில் இன்று நெல்லை, சங்கரன்கோவில் தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது கனிமொழி எம்.பி.யும் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பின்போது அனைத்து நிர்வாகிகளுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடி எச்சரிக்கை விடுத்ததாகவும், நெல்லை தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றால் கட்சி நிர்வாக பதவிகள் பறிக்கப்படும் என்று அவர் எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கையின் போது திமுகவினர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நிர்வாகிகளிடம் அவர் வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.