அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் எம்.பி உள்பட 12 பேரை அதிமுகவிலிருந்து நீக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என பேசி வந்த செங்கோட்டையனுக்கும், கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பிணக்கு ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து அடுத்த அதிரடி நடவடிக்கையில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஆதரவாளர்களை கண்டறிந்து அவர்களையும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். செங்கோட்டையனுக்கு கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு பகுதிகளில் முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு உள்ளது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி சத்யபாமா, கோபி மேற்கு ஒன்றியம் குறிஞ்சிநாதன், ஈரோடு மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் உள்ளிட்ட 12 பேரை கட்சியை விட்டு நீக்குவதாக அதிமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K