Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்.. முக்கிய ஆலோசனை

Mahendran
வியாழன், 15 பிப்ரவரி 2024 (11:35 IST)
பிப்ரவரி 23ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்சென்னை வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அவரது வருகையின்போது தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை செய்வார் என்றும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர் பிப்ரவரி 24, 25 என இரண்டு நாட்கள் சென்னையில் தங்கியிருந்து ஆலோசனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
 
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதை அடுத்து நாடு முழுவதும் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் அவ்வப்போது இந்தியாவின் பல இடங்களுக்கு சென்று தேர்தல் குறித்து ஆலோசனை செய்து வருகிறார்
 
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நிலவரங்கள் குறித்து அவர் ஆலோசனை செய்து வரும் நிலையில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி அவர் சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அவர் இரண்டு நாட்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை செய்வார் என்றும் அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரம் முழுவதும் நெகட்டிவ்.. இன்றும் பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது இன்னொரு வழக்கு: மீண்டும் கைது செய்த போலீசார்..!

6 ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. கடும் எதிர்ப்பு கிளம்புமா?

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments