சென்னை அசோக்நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது உதயம் திரையரங்கு. இதில் 4 திரையரங்குகளில் இயங்கி வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இத்தனை ஆண்டுகள் இயங்கி வந்த உதயம் தியேட்டர் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தியேட்டர் உள்ள இடத்தை பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தியேட்டரை இடித்துவிட்டு அங்கு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றைக் கட்ட உள்ளதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில்தான் சென்னை மவுண்ட் ரோடில் உள்ள சாந்தி திரையரங்கும் இதுபோல மூடப்பட்டு அங்கு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்ட முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அடுத்தடுத்து வரிசையாக சென்னையின் பிரபல திரையரங்குகள் மூடுவிழா காண்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.