Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பிணி பெண்கள் இலவச வாகன உதவி செய்யும் சென்னை இளைஞர்!

Advertiesment
கர்ப்பிணி பெண்கள் இலவச வாகன உதவி செய்யும் சென்னை இளைஞர்!
, திங்கள், 6 ஏப்ரல் 2020 (19:57 IST)
கர்ப்பிணி பெண்கள் இலவச வாகன உதவி
சென்னை ஆவடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு நேரத்திலும் இலவச வாகன சேவை செய்து வருவதால் பெரும் பாராட்டுதலைப் பெற்று வருகிறார் 
 
சென்னை ஆவடியை சேர்ந்த லியோ ஆகாஷ்ராஜ் என்ற இளைஞர் தன்னுடைய நண்பருடன் சேர்ந்து மொத்தம் மூன்று வாகனங்களை கர்ப்பிணி பெண்களுக்காக இலவச சேவை செய்ய பயன்படுத்தி வருகிறார் 
 
இவர் தனது மொபைல் எண்ணான 9600432255 என்ற எண்ணை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த எண்களை பார்த்து கர்ப்பிணி பெண்கள் கால் செய்யும் பொழுது அவர்களுக்கு உடனடியாக வாகனங்களை அனுப்பி மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்கிறார். இதற்காக இவர் ஒரு பைசா கூட பெற்றுக்கொள்வதில்லை
 
கடந்த 13 நாட்களில் இவர் 53 கர்ப்பிணி பெண்களை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்து உள்ளதாகவும் அவர்களில் 23 பேர் சுகப்பிரசவம் அடைந்து குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து கருத்து தெரிவித்த லியோ ஆகாஷ்ராஜ், ‘இந்த ஊரடங்கு நேரத்தில் என்னால் முடிந்த சிறு உதவியை கர்ப்பிணி பெண்களுக்கு செய்து தருகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த இலவச வாகன சேவையை கர்ப்பிணி பெண்கள் பாராட்டி வருகின்றனர். இந்த உதவியை பெற்ற பலர் வாட்ஸ்அப் தங்களது வாட்ஸ்அப் குரூப்களில் அவரது எண்ணை பதிவு செய்து அவரது சேவையைப் பயன்படுத்த பரிந்துரை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா : 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்துள்ளனர்!!!