வருகிற அக்டோபர் முதல் இரு சக்கர வாகனங்களுக்கு புதிய விதிகளை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
வருகிற அக்டோபர் மாதம் முதல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான புதிய விதிகள் நடைமுறைப்படுத்த உள்ளது. அதன் படி மோட்டார் வாகன சட்டத்திருத்ததிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த விதியின்படி, இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. மேலும் பின் இருக்கையில் அமர்பவர்களுக்கு ஃபுட் ரெஸ்ட் இருப்பது அவசியமாகிறது. அதே போல் பின் சக்கரத்தை பாதியாக மறைக்கும் வரை மட் கார்ட் பொருத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களின் பாதுகாப்பிற்காக இருக்கையை ஒட்டி கைப்பிடி அமைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை கடைப்பிடிக்காத வாகன ஓட்டிகள் மீது சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.