Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு - தமிழக டிஜிபி உத்தரவு

Advertiesment
சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு - தமிழக டிஜிபி உத்தரவு
, வியாழன், 2 ஏப்ரல் 2020 (20:14 IST)
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 69 ஆக அதிகரித்துள்ளது.  இதில், மகாராஷ்டிராவில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து,  நாடு முழுவதும் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 2372 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309ஆக உயர்ந்துள்ளது.  மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுவரை மூன்றாம் இடத்தில் இருந்த தமிழகம் இன்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் தமிழக டிஜிபி திரிபாதி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாவது :அனைத்துவகை சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். காவலர்கள் தடுத்தி நிறுத்தி சோதனை செய்ய வேண்டாம்" சரக்கு வாகன ஓட்டுநர்களிடம் பாஸ் கேட்க வேண்டாம் எனவும் . தமிழக காவல்துறை டிஜிபி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியை ஊருக்கு அனுப்பி விட்டு வீட்டில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது