சென்னை மெட்ரோ ரயில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றதால், அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகருக்கு இன்று காலை புறப்பட்ட மெட்ரோ ரயில், சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றதால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பயணிகள் ரயில் உள்ளே சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால், மெட்ரோ ரயில் சேவை மீண்டும் சீரானது என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.