சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ரூ.2036 கோடி மதிப்பில் 28 புதிய மெட்ரோ ரயில்களை வாங்க டெண்டர் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த 28 ரயில்களில் ஒவ்வொன்றும் ஆறு பெட்டிகள் கொண்டதாக இருக்கும். இந்த ரயில்களை வாங்க ரூ.2036 கோடிக்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 28 புதிய ரயில்களும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்தால், சென்னையில் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் குறைந்த நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை பல்வேறு வழித்தடங்களில் விரிவுபடுத்தப்பட்டு வருவதால், அதிக ரயில்கள் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.