தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் தமிழகம் முழுவதும் வெப்பநிலை குறைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.