தனியார் தொலைக்காட்சியிலிருந்து தனது மெயில் வந்ததாக போலி இ-மெயிலை காட்டியதாக யூட்யூப் பிரபலம் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
யூட்யூபில் அரசியல் சார்பான வீடியோக்கள் வெளியிடுவதில் பிரபலமானவர் மாரிதாஸ். பாஜக ஆதரவாளரான இவர் நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டை பெற்றவர். சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்காக தனியார் செய்தி தொலைக்காட்சியில் புகார் அளித்திருப்பதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிறகு அந்த தனியார் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனரிடம் இருந்து தனக்கு பதில் வந்திருப்பதாக மற்றொரு மெயிலை வைத்து வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
ஆனால் அந்த இ-மெயிலை தான் அனுப்பவில்லை என தெரிவித்துள்ள தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர், தனது பெயரை பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்புவதாக மாரிதாஸ் மீது புகார் அளித்துள்ளார். இதனால் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் யூட்யூப் மாரிதாஸ் மீது இணையவழி மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.