Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் – ஆவடியில் கணவன் மனைவி கைது !

Advertiesment
சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் – ஆவடியில் கணவன் மனைவி கைது !
, ஞாயிறு, 19 ஜனவரி 2020 (08:58 IST)
டியுஷனுக்கு வந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்ட நபர் மற்றும் அவரது கணவரைப் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ஆவடியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் தம்பதிகள் நரேஷ் மற்றும் விஜயலட்சுமி. நரேஷ் ஆட்டோ ஓட்டுனராகப் பணியாற்ற அவரது மனைவி விஜயலட்சுமி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைப் பார்த்து வருகிறார். விஜயலட்சுமி ஆசிரியர் என்பதால் மாலை நேரங்களில் தனது வீட்டில் குழந்தைகளுக்கு டியுஷன் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் டியுஷனுக்கு வந்த 6 வயது சிறுமி ஒருவரிடம் நரேஷ் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்கு செல்ல பெற்றோர் பதறியுள்ளனர். அதே டியுஷனில் படிக்கும் சிறுமியின் சகோதரர் நடந்த விவரங்களைப் பெற்றோரிடம் சொல்லியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். போலிசார் நரேஷ் வீட்டுக்குச் சென்று பார்க்க கணவன் மனைவி இருவரும் தலைமறைவாகியுள்ளனர். அதன் பின் பூந்தமல்லியில் இருந்த அவர்களைக் கைது செய்துள்ளனர். அவர்களைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமி கூட்டுப் பலாத்காரம்… தாய் படுகொலை – நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம் !