Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுமி கூட்டுப் பலாத்காரம்… தாய் படுகொலை – நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம் !

Advertiesment
சிறுமி கூட்டுப் பலாத்காரம்… தாய் படுகொலை – நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம் !
, ஞாயிறு, 19 ஜனவரி 2020 (08:38 IST)
உத்தர பிரதேசத்தில் தனது பெண்ணை பாலியல் வல்லுறவு செய்தவர்கள் மீதானப் புகாரைத் திரும்ப பெறமுடியாது என சொன்ன தாயை குற்றவாளிகள் தாக்கிக் கொலை செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த மாணவி ஒருவரை 4 பேரைக் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வல்லுறவு செய்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி  தனக்கு நடந்த கொடூரத்தை தனது தாயிடம் சொல்ல அவர் இது சம்மந்தமாக போலிஸாரிடம் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் அந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஜாமீன் பெற்ற அவர்கள் இப்போது வெளியில் உள்ளனர். வழக்கிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மீதானப் புகாரைத் திரும்ப பெற சொல்லி மிரட்டி வந்துள்ளனர். அதில் ஒரு இளைஞர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அதற்கு சிறுமியின் தாயார் மறுத்துவிடவே அவரை மோசமாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதற்றத்தை உண்டாக்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் மதுவிற்பனை: சாதனை செய்த டாஸ்மாக்