சென்னை பிராட்வே பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுவது குறித்த அறிவிப்பில் தற்போது முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த வரலாற்று சிறப்புமிக்க பேருந்து நிலையம், ஜனவரி 7 முதல் தீவு திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு மாற்றப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் இந்த இடமாற்ற நடவடிக்கை தற்போது தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாகச் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை பிராட்வே பேருந்து நிலையம் எப்போதும் போல தனது வழக்கமான சேவைகளை தொடரும் என்று போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தினசரி பிராட்வே வழியாக பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கும், அப்பகுதி வியாபாரிகளுக்கும் தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.