Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த பக்கம் ஏன் வறீங்க?. நீங்க என்ன விஐபி-யா?!.. அசிங்கப்பட்ட வானதி சீனிவாசன் (வீடியோ)..

Advertiesment
vanathi
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது.. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்..

இந்த பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக பிரதமர் மோடி நேற்று விமானம் மூலம் தமிழகம் வந்தார். திருப்பரங்குன்றம் கோயிலில் வழிபாடு செய்தவர் அதன்பின் இந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.. அப்போது திமுகவுக்கு எதிராக அவர் பல கருத்துகளையும் முன்வைத்தார்..

இந்நிலையில், ஒரு வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.. மாநாடு துவங்குவதற்கு முன் ஒரு இடத்தில் மத்திய அமைச்சர்  பியூஸ் கோயல் நின்று கொண்டிருக்க எதிரே வரும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட சிலரை ‘இந்த பக்கம் நீங்கள் வரக்கூடாது.. ‘நீங்கள் என்ன விஐபியா?’ என்று அவர்களைப் பார்த்து கேள்வி கேட்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. அதன்பின் பியூஸ் கோயலிடம் வானதி ஏதோ சொல்கிறார்.

இந்த வீடியோவை திமுகவினர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ‘பாஜக தலைமை எப்போதும் இப்படித்தான்.. தமிழகத்தின் பாஜக தலைவர்கள் யாரையுமே அவர்கள் மதிக்க மாட்டார்கள்.. வேல்முருகன், தமிழிசை, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் என பலரிடமும் இப்படித்தான் நடந்து கொண்டார்கள்.. வானதி சீனிவாசனுக்கு இது அசிங்கம்’ என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலி!.. மாநிலங்களுக்கு ஒன்றிய உள்துறை அலார்ட்!...