Publish Date: Wed, 20 Nov 2019 (08:28 IST)
Updated Date: Wed, 20 Nov 2019 (08:31 IST)
கோவில் சிலைகளை குறித்து தொல்.திருமாவளவன் சர்ச்சையாக பேசியதாக போலீஸார் வழக்கு பதிவு
சமீபத்தில் ஹிந்து கோவில் சிலைகள் குறித்து தொல்.திருமாவளவன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதனை தொடர்ந்து ஹெச்.ராஜா உள்ளிட்ட ஹிந்து மத ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் திருமாவளவன் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் கடுமையாக பேசிவந்தார்.
இந்நிலையில் கோவில் சிலைகளை குறித்து தொல்.திருமாவளவன் சர்ச்சையாக பேசியதாக அவர் மீது பெரம்பலூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்து முன்னணியின் நகர செயலாளர் கண்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.