Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: பெரும் பரபரப்பு

Advertiesment
சென்னையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: பெரும் பரபரப்பு
, புதன், 20 நவம்பர் 2019 (07:25 IST)
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சேலத்தைச் சேர்ந்த மூன்று பேர் சென்னைக்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்த போது அந்த கார் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் பேட்டரியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டதால் காரின் முன் பக்கத்திலிருந்து திடீரென புகை வந்துள்ளது
 
இதனை சாலையில் சென்றவர்கள் காரில் இருந்தவர்களிஅம் சுட்டிக் காட்டியதை அடுத்து காரை நிறுத்திய அவர்கள், உடனடியாக காரை விட்டு வெளியேறினர். அவர்கள் வெளியேறிய ஒரு சில நொடிகளில் கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது
 
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் முற்றிலும் சேதமடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தீ விபத்து காரணமாக பல்லாவரம்-கிண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து ஒரு சில நிமிடங்களில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர் சென்னையின் முக்கிய பகுதியான விமான நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் ரஜினி இணைப்பு திடீரென வந்த ஐடியாவா? திட்டமிட்டதா?