புதுவையில் விஜய்யின் ரோடு ஷோ... அனுமதி பெற முதலமைச்சரை சந்திக்கும் புஸ்ஸி ஆனந்த்!

Mahendran
செவ்வாய், 2 டிசம்பர் 2025 (15:33 IST)
புதுச்சேரியில் விஜய்யின் கட்சி தலைவரான புஸ்ஸி ஆனந்த், தளபதி விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி கோரி மீண்டும் காவல்துறையை அணுகியுள்ளார். 
 
நேற்று  ஐ.ஜி. ஏ.கே.சிங்லாவை அவர் சந்தித்த நிலையில், இன்று சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி அலுவலகத்திற்கு வந்து மீண்டும் அனுமதி கோரினார்.
 
அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை சந்தித்து பேசுவதற்காக அவரது இல்லத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதற்கிடையே, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி சபாநாயகர் செல்வம், "விஜய் நடத்தும் ரோடு ஷோவுக்கு அனுமதி அளிப்பது ஏற்புடையதல்ல," என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
தவெக-வின் முக்கிய நிர்வாகியின் தொடர்ச்சியான முயற்சிகளும், சபாநாயகரின் இந்த எதிர்ப்பும் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம், ஆனால் கட்டாயம் அல்ல: மத்திய அமைச்சர் சிந்தியா விளக்கம்!

புதுவையில் விஜய்யின் ரோடு ஷோ... அனுமதி பெற முதலமைச்சரை சந்திக்கும் புஸ்ஸி ஆனந்த்!

ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை: வரதட்சணை கொடுமை புகார் குறித்து விசாரணை!

SIR பெயரில் ஒரு சைபர் க்ரைம்.. போலி APK ஃபைல்களை க்ளிக் செய்ய வேண்டாம்..

அரசியலில் எந்தப் புயல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தி.மு.க. தயார்: தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments