Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர் முயற்சியில் தவெக... புதுச்சேரியில் விஜயின் ரோட் ஷோ நடக்குமா?....

Advertiesment
தவெக

Bala

, செவ்வாய், 2 டிசம்பர் 2025 (11:41 IST)
தமிழக வெற்றிக் கழத்தின் தலைவர் விஜய் டிசம்பர் 5ம் தேதி சேலத்தில் மக்கள் முன்னிலையில் பேச அனுமதி கேட்டிருந்தார். ஆனால் கரூர் சம்பவம் ஏற்படுத்த விளைவு காரணமாக போலீசார் அவருக்கு அனுமதி கொடுக்கவில்லை. எனவே அதே தேதியில் புதுச்சேரியில் ரோட் ஷோ நடத்த திட்டமிட்டார் விஜய்.
 
காலப்பட்டு முதல் கன்னியகோவில் வரை ரோட் ஷோ போகவும், சோனாம்பாளையத்தில் வாகனத்தில் இருந்தபடியே விஜய் பேசுவதற்கும் புதுச்சேரி காவல்துறையினரிடம் தவெக சார்பில் கடந்த 26ம் தேதி அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால் போலீசார் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. எனவே தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கடந்த 29ஆம் தேதி டிஜிபி அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் அங்கு டிஜிபி இல்லை. டிஜிபி ஊரில் இல்லாததால் அவர் வந்தபின் வாருங்கள் என சொல்லி போலீசார் அவரை அனுப்பிவிட்டனர்.
 
இரண்டு விஷயங்களுக்காக புதுச்சேரி காவல்துறை விஜயின் ரோட் ஷோவுக்கு அனுமதி கொடுக்க தயங்கி வருகிறது. அதில் ஒன்று ஏற்கனவே கரூரில் நடந்த சம்பவம்.. புதுச்சேரியில் விஜய் பேசுகிறார் என்றால் அவரை பார்க்க விழுப்புரம், கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் புதுச்சேரியில் குவிந்து விடுவார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது சிரமம்.
 
ஒருபக்கம் ரோட் ஷோவுக்கான வழிகாட்டு நெறிமுறை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தீர்ப்பு வந்த பின்னரே இது பற்றி முடிவெஎடுக்க முடியும். குறிப்பாக போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள புதுச்சேரியில் ரோட் ஷோ நடத்துவது மிகவும் சிரமம் என புதுச்சேரி காவல்துறை கருதுகிறது.
 
எனவே திடல் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த விஜயை பேச வைக்கலாம் எனவும் புதுச்சேரி காவல்துறை யோசித்து வருகிறதாம். இது தொடர்பாக இன்று தவெக நிர்வாகிகளிடம் புதுச்சேரி காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது.அதன்பின் சுமூக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாம் சரியாக அமைந்தால் விஜய் வருகிற 5ம் தேதி புதுச்சேரிக்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலை உணவுக்காக டிகே சிவகுமார் வீட்டுக்கு சென்ற சித்தாராமையா.. இருவரும் சமரசமா?