ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை: வரதட்சணை கொடுமை புகார் குறித்து விசாரணை!

Mahendran
செவ்வாய், 2 டிசம்பர் 2025 (14:55 IST)
ஆந்திர பிரதேசம் குண்டூர் மாவட்டத்தில், ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் 25 வயது மகள், மாதூரி சாஹிதிபாய், தனது பெற்றோர் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மங்களகிரி டி.எஸ்.பி. முரளி கிருஷ்ணா அளித்த தகவலின்படி, வரதட்சணைக் கொடுமை குறித்து புகார் அளித்திருந்த நிலையில், சாஹிதிபாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
 
சாஹிதிபாய் கடந்த மார்ச் 5ஆம் தேதி நந்தியாலா மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் நாயுடு என்பவரை திருமணம் செய்திருந்தார். திருமணம் ஆன சில மாதங்களில், அவர் வரதட்சணை கொடுமைக்கு ஆளாவதாக பெற்றோருக்குத் தெரிவித்ததையடுத்து, செப்டம்பர் முதல் வாரத்தில் அவர்கள் சாஹிதிபாயை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அன்றிலிருந்து அவர் அங்கேயே தங்கியிருந்தார்.
 
இந்த சம்பவம் குறித்து, பிஎன்எஸ் சட்டப்பிரிவு 80 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கான சரியான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR பெயரில் ஒரு சைபர் க்ரைம்.. போலி APK ஃபைல்களை க்ளிக் செய்ய வேண்டாம்..

அரசியலில் எந்தப் புயல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தி.மு.க. தயார்: தங்கம் தென்னரசு

செங்கோட்டையன் - திருநாவுக்கரசர் சந்திப்பு: தவெகவில் இன்னொரு ஆளுமையா?

நாளை திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம்.. இன்று மஞ்சள் எச்சரிக்கை..

நம்மால் 1962-வை மறக்க முடியுமா?: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி

அடுத்த கட்டுரையில்
Show comments