அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

Mahendran
திங்கள், 24 நவம்பர் 2025 (14:01 IST)
வேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் குழந்தை சடலம் கிடப்பதாக பொதுமக்கள் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
 
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையை வீசிச்சென்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
குழந்தை இறந்த பிறகு வீசப்பட்டதா அல்லது உயிருடன் வீசப்பட்டதா என்பது உடற்கூராய்வின் முடிவில்தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
 
மருத்துவமனைக்கு அருகிலேயே நிகழ்ந்த இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

டெல்லியில் காற்று மாசை கண்டித்து போராட்டம்.. காவல்துறையினர் மீத் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments