Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

Advertiesment
சிறுநீரக தானம்

Siva

, வெள்ளி, 17 அக்டோபர் 2025 (17:30 IST)
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 72 வயதான கங்கா வர்மா என்ற மூதாட்டி, தனது நோய்வாய்ப்பட்ட மகன் கமலேஷ் வர்மாவுக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்து மறுவாழ்வு அளித்துள்ளார்.
 
கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்சனையால் கமலேஷ் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தனர். இதனையடுத்து, தாய் கங்கா வர்மா தயக்கமின்றி தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்தார்.
 
இந்தூரில் உள்ள அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சமீபத்தில் இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
 
மருத்துவமனையின் சிறுநீரகத் துறை தலைவர் டாக்டர் ரிதேஷ் பனோடே, "தானமளித்தவரின் வயது முதிர்வு காரணமாக அறுவை சிகிச்சை சவாலாக இருந்தும், அது முழு வெற்றி பெற்றது" என்று உறுதிப்படுத்தினார். சிகிச்சைக்குப் பின் தாயும், மகனும் தற்போது வீட்டில் நலமாக மீண்டு வருகின்றனர்.
 
"என் சிறுநீரகம் என் மகனின் உயிரை காப்பாற்றியது என்றால், இதைவிட எனக்கு என்ன மகிழ்ச்சி வேண்டும்? இது ஒரு தாயின் கடமை" என்று தாய் கங்கா வர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..