Publish Date: Fri, 27 Feb 2026 (18:34 IST)
Updated Date: Fri, 27 Feb 2026 (18:40 IST)
கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தில் நடிக்க தொடங்கி முப்பது வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து வந்தவர். விஜய்க்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ரசிகர் கூட்டத்தை நம்பிதான் தற்போது அரசியலுக்கும் வந்திருக்கிறார்..2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் 18 சதவீத வாக்குகள் வாங்கும் என கருத்துக்கணிப்புகள் சொல்கிறது.. குறிப்பாக பெண்களின் ஓட்டு அதிகமாக விஜய்க்கு கிடைக்கும் என பலரும் சொல்கிறார்கள்..
இந்நிலையில்தான், அதன் மீது குண்டு வீசியிருக்கிறார் விஜயின் மனைவி சங்கீதா.. விஜயிடம் விவாகரத்து கேட்டு சென்னை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.. அதில் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருந்ததாகவும் அதை தட்டிக் கேட்டதால் தன்னை விஜய் கொடுமைப்படுத்துவதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்..
இந்த வழக்கில் வரும் ஏப்ரல் 20ஆம் தேதி விஜய் நேர்ல ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த வழக்கு விஜயன் அரசியல் இமேஜை பாதிக்க வாய்ப்பிருப்பதாக பலரும் சொல்லுகிறார்கள்..
குறிப்பாக பெண்களுக்கு விஜய் மீது கோபம் வந்தால் அவர்கள் அவர் தவெகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது.. ஆனால் சிலரோ தமிழ்நாட்டு மக்கள் அப்படி இல்லை.. சொந்த வாழ்க்கையை பார்க்க மாட்டார்கள்.. திமுக தலைவர் கருணாநிதி கூட மனைவியார், துணைவியார் என அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தது. எனவே அதற்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள்.
விஜய் மீது சங்கீதா கூறியிருக்கும் புகார்கள் விஜயின் அரசியல் வாழ்க்கையை பாதிக்குமா? இல்லையா? என்பது தேர்தல் முடிவுக்கு பின்னரே தெரியவரும்...