சேது சமுத்திர திட்டத்திற்கான தீர்மானம் இன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் பாஜக நிபந்தனையுடன் ஆதரவு அளித்துள்ளது.
மன்னார் வளைகுடாவில் கப்பல்கள் புகுந்து செல்லும் வகையில் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை அமல்படுத்த நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த பகுதியில் உள்ள ராமர் பாலம் மத நம்பிக்கைகள் கொண்ட பகுதி என்பதால் அதன் குறுக்கே கால்வாய் அமைப்பது குறித்த விவாதங்கள் இருந்து வந்தது.
சமீபத்தில் ராமர் பாலத்திற்கான சரித்திர ஆதாரங்கள் இல்லை என மத்திய அரசு கூறியிருந்த நிலையில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை அமல்படுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு ராமர் பாலத்திற்கு எந்த சேதமும் ஏற்படாமல் கால்வாய் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும், இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை வரவேற்பதாகவும் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.