தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுனர் பேசியதை திமுக திட்டமிட்டு அரசியலாக்குவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் ஆளுனர் சில வார்த்தைகளை தவிர்த்து விட்டு பேசியதாக எழுந்த சர்ச்சையில் ஆளுனர் பாதியிலேயே கூட்டத்தொடரில் இருந்து வெளியேறினார். இது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் ஆளுனர் செய்தது தவறு என்று திமுகவும், திமுக செய்தது தவறு என எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் திண்டுக்கலில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “முதலமைச்சர் ஸ்டாலின் கூட இதற்கு முன்பு தமிழ்நாடு, தமிழகம் என்ற இரண்டு வார்த்தைகளையுமே பயன்படுத்தியுள்ளார். ஆனால் ஆளுனர் பேசியதை வைத்து திமுக அரசியல் செய்கிறது” என்று பேசியுள்ளார்.
மேலும் மக்களுக்காகவே ஆளுனர் உள்ளதாகவும், அவருடன் தமிழ்நாடு அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறிய அவர், அரசியலில் துணிவுடன் செயல்பட்டு வருவதாகவும், வாரிசு அரசியலை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.