விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஆண்டிற்காக பிக்பாஸ் சீசன் தொடங்கியுள்ள நிலையில், குறைந்த நாட்களிலேயே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் ஜி பி முத்து. ஆனால் தன் குழந்தைகளை விட்டு இருக்க முடியாது என்று சொல்லி, அவர் வெளியேறினார்.
வெளியேறிய பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளோடு இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து செல்ல பேச்சுவார்த்தை நட்ப்பதாகவும், அதற்கு ஜி பி முத்து சம்மதித்து மீண்டும் அவர் பிக்பாஸ் வீட்டுக்கு செல்வார் என்று தகவல்கள் பரவி வந்தன.
அதை உறுதிப் படுத்தும் விதமாக தற்போது ஜி பி முத்து உள்ளிட்ட இதுவரை வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். இது சம்மந்தமான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட அந்த வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.