Publish Date: Wed, 11 Jan 2023 (20:59 IST)
Updated Date: Wed, 11 Jan 2023 (21:01 IST)
ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என டிஆர் பாலு தலைமையில் நாளை குடியரசுத் தலைவரை திமுக எம்பிக்கள் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்து சில மாதங்களாக தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் பனிப்போர் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் சட்டமன்றத்தில் அது பெரும் பிரச்சனையாக வெடித்தது.
ஆளுநரை பேச விடாமல் திமுக எம்எல்ஏக்கள் கூச்சல் இட்டதை சபாநாயகர் அப்பாவு கண்டிக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், முதல் அமைச்சர் பேசி கொண்டிருக்கும்போது திடீரென ஆளுநர் வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நாளை காலை 11:45 மணிக்கு டிஆர் பாலு தலைமையிலான திமுக மக்களவை குழு குடியரசுத் தலைவரை சந்திக்க இருப்பதாகவும் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் நேரில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.