நீக்கப்பட்டவர்கள் புதிய புதிய வாக்காளர்களுக்கான படிவத்தை பயன்படுத்தலாமா? முக்கிய தகவல்..!

Siva
ஞாயிறு, 21 டிசம்பர் 2025 (10:57 IST)
சென்னையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விடுபட்ட மற்றும் நீக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களை மீண்டும் பட்டியலில் இணைத்துக்கொள்ள, புதிய வாக்காளர்களுக்கான 'படிவம் 6'-ஐ பயன்படுத்துவது சட்டரீதியாக செல்லுமா என்ற கேள்வியை பாஜக எழுப்பியுள்ளது.
 
சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில், பாஜக மாநில செயலாளர் கராத்தே ஆர். தியாகராஜன் இக்கேள்வியை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த தேர்தல் சிறப்புப் பார்வையாளர் ராமன்குமார், தற்போதுள்ள நடைமுறைப்படி அந்த படிவத்தையே பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளதாகவும், இது குறித்துத் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.
 
அதிமுக சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், யாருக்கும் வாக்குரிமை மறுக்கப்பட கூடாது என்றும், விடுபட்டவர்களை சேர்க்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 
 
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம்களில் பொதுமக்களின் வருகை குறைவாகவே காணப்பட்ட நிலையில், இந்தச் சட்டச் சிக்கல் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி பெயரை திட்டத்தில் இருந்து நீக்கிய மத்திய அரசு.. அதே பெயரில் திட்டம் தொடங்கிய மம்தா பானர்ஜி

விஜய் - செங்கோட்டையன் நடத்திய ரகசிய ஆலோசனை: புஸ்ஸி ஆனந்த் இல்லாததால் பரபரப்பு

700 பில்லியன் டாலர் சொத்து: உலக வரலாற்றில் புதிய சாதனை படைத்த எலான் மஸ்க்

சிரஞ்சீவியாக இருக்க போகிறாரா? பவன் கல்யாண் ஆக இருக்க போகிறாரா? விஜய்க்கு தமிழருவி மணியன் கேள்வி..!

திமுகவுக்கு சாவு மணி அடிச்சாச்சி!.. மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments