Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக நிர்வாகி தீக்குளிப்பு....காவல்துறைக்கு அண்ணாமலை எச்சரிக்கை

Advertiesment
பாஜக நிர்வாகி தீக்குளிப்பு....காவல்துறைக்கு அண்ணாமலை எச்சரிக்கை
, செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (16:42 IST)
‘’காவல்துறையினரின் இது போன்ற பாரபட்சத் தன்மை தொடருமேயானால், தமிழகம் முழுவதும் பாஜகவினரின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று   தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’தமிழகக் காவல்துறையின் பொய் வழக்குகள் மற்றும் தொடர்ச்சியான அடக்குமுறையை காரணமாக, துடிப்பான இளைஞரான பரமக்குடி ஒன்றிய  பாஜக இளைஞரணி துணைத் தலைவர் திரு. தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்று பார்த்திபனூர் காவல் நிலையத்திலே தீக்குளித்துள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

தமிழகக் காவல்துறை முழுக்க முழுக்க திமுகவின் ஏவல்துறையாகவே மாறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்து, ஆளுங்கட்சியினர் தூண்டுதலுக்கேற்ப, பாஜகவினரை மிரட்டுவதையும் துன்புறுத்துவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது.

காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்து  தமிழக பாஜக ராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு தரணி முருகேசன் அவர்கள் மற்றும்  தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு ரமேஷ் சிவா அவர்கள், காவல்நிலையத்தின் முன் போராட்டம் நடத்தியுள்ளனர். காவல்துறையினரின் இது போன்ற பாரபட்சத் தன்மை தொடருமேயானால், தமிழகம் முழுவதும் பாஜகவினரின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு கோடி முறை 'கோவிந்தா' என எழுதினால் திருப்பதியில் குடும்பத்துடன் வி.ஐ.பி. தரிசனம்: தேவஸ்தானம்!