Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக பயிற்சி பட்டறை : 20 ஆயிரம் பேருக்கு தயாராகும் கமகம பிரியாணி

Advertiesment
flag
, வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (17:51 IST)
ராமநாதபுத்தில் திமுக முகவர்கள் கலந்து கொண்டுள்ள  பயிற்சி பட்டறையில்  தொண்டர்களுக்கு   பிரியாணி மற்றும் சிக்கன் 65 விருந்து தயாராகி வருகிறது.

அடுத்தாண்டு  நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து, இதற்காக ஆளுங்கட்சியான திமுக,  ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் பங்கேற்றுள்ளது.

திமுக சார்பில் அனைத்து வாக்குச்சாவடிக்கும் சமீபத்தில்  தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று  தென்மண்டலம்  அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் அருகேயுள்ள தேவிபட்டனம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வரும் முகவர்கள் கூட்டத்திற்கு 19 மாவட்டங்களைச் சேர்ந்த திமுக முகவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில், சுமார் 20,000 பேருக்கு மேல் கலந்து கொள்வார்கள்  என்று கூறப்படும் நிலையில், கூட்டத்தில் பங்கேற்றுள்ள திமுகவினருக்கு பிரியாணி மற்றும் சிக்கன் 65 விருந்து தயாராகி வருகிறது.

டெல்டா மண்டலத்திற்குட்பட்ட  மாவட்ட வாக்குச்சாவடி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் கடந்த மாதம் 26 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்றது.  இந்தப்  பாசறை கூட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி கோரிக்கை