Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்போன் கடையை அடித்து நொறுக்கிய நபர்கள் வைரலாகும் வீடியோ

Advertiesment
dmk
, சனி, 2 செப்டம்பர் 2023 (16:11 IST)
ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் உள்ளிட்ட சிலர் ஒரு செல்போன் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாக வெளியாகும் தகவல்   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக இந்த ஆட்சியின் மீது பல விமர்சனங்கள் கூறி வருகின்றன.

இந்த  நிலையில்,  ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் உள்ளிட்ட சிலர் ஒரு செல்போன் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான  இந்த காட்சியில்,   ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் உதவியாளர் அஜித் சேதுபதி தனது கூட்டாளிகள் உட்பட ஆறு பேருடன் சேர்ந்து கொண்டு செல்போன் கடையை அடித்து நொறுக்கியதாகவும்  அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகிறது. இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிங்கப்பூரின் 9வது அதிபர் ஒரு தமிழர்: டிடிவி தினகரன் பெருமிதம்..!