சவுக்கு சங்கர் மீதான 4 வழக்குகளில் ஜாமீன்: எப்போது விடுதலை?

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (14:36 IST)
சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் அவருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் மதுரை ஐகோர்ட்டு கிளை சிறை தண்டனை விதித்த நிலையில் அந்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் சவுக்கு சங்கர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அவரது தண்டனையை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் 4 வழக்குகள் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் 
 
இதனை அடுத்து 4 வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில் 4 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments