Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுதலை படத்துக்கு பூசணிக்காய் உடைக்கப் போகும் வெற்றிமாறன்!

விடுதலை படத்துக்கு பூசணிக்காய் உடைக்கப் போகும் வெற்றிமாறன்!
, செவ்வாய், 15 நவம்பர் 2022 (16:05 IST)
விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் பாகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட விடுதலை இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர்.

ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றோடு இரண்டு பாகங்களின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்யா முத்தையா கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு இதுவா? கசிந்த தகவல்!