முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய உடந்தையாக இருந்ததாக கூறப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்களை போலவே என்னையும் விடுதலை செய்யுங்கள் என சாமியார் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக்காக மனைவியை கொலை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஜெயிலில் இருப்பவர் 80 வயது சாமியார் சுவாமி ஷரத்தானந்த். இவரது சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் ஒரு கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தனக்கு ஒரு நாள் கூட பரோல் கிடைக்கவில்லை என்றும் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யப்பட்டது போல் என்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.