காஷ்மீரில் நடந்த தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடந்த தாக்குதல் மாதிரி தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 370 சட்டப்பிரிவை நீக்கினால் ஜம்மு காஷ்மீரில் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளும் இருக்காது என பாஜக கூறியது. அங்கு சுற்றுலா செல்லலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. அதனை நம்பி மக்கள் சுற்றுலா சென்ற நிலையில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் பதவி விலகியது மாதிரி இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு பயன்படவில்லை, மாறாக அதை தீவிர படுத்துவதற்கு தான் பயன்பட்டது. எனவே, காஷ்மீரில் நடந்துள்ள இந்த தாக்குதல் மத்திய அரசுக்கு எதிரான தாக்குதலாகவே எண்ண வேண்டி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.