Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”திரும்ப காஷ்மீருக்கே போங்க?” காஷ்மீர் மாணவர்களை தாக்கி அச்சுறுத்தும் வட மாநிலத்தவர்கள்!

Advertiesment
Kashmir students

Prasanth Karthick

, வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (10:12 IST)

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் கோபத்திற்கு உள்ளான மக்கள் வடமாநிலங்களில் படித்து வரும் காஷ்மீரை சேர்ந்த மாணவர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது.

 

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது அங்கிருந்த பல சுற்றுலா பயணிகளை அப்பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்கள்தான் காப்பாற்றியதாக அந்த பயணிகளே கூறியுள்ளனர்.

 

ஆனால் சமூக வலைதளங்களில் காஷ்மிரி இஸ்லாமிய மக்கள் மீது தவறான ஊதி பெரிதாக்கபட்ட பிம்பம் பரப்பப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் காஷ்மீரிலிருந்து வந்து வட மாநிலங்களில் தங்கி படித்து வரும் இஸ்லாமிய மாணவர்கள் தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளனர். 

 

ஜம்மு காஷ்மீர் மாணவர் நல சங்கமான JKSA, வட மாநிலங்களில் 8 இடங்களில் காஷ்மீர் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக கூறியுள்ளது. உத்தரகாண்டில் இந்து ரக்‌ஷா தள் வெளியிட்ட வீடியொ ஒன்றில், காஷ்மீர் முஸ்லீம்கள் வியாழக்கிழமைக்குள் மாநிலத்தை விட்டு வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் என எச்சரித்துள்ளது. இதனால் மாணவர்கள் பலர் பயத்தில் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அதுபோல பஞ்சாப் மாநிலத்தில் விடுதி ஒன்றிற்குள் சிலர் புகுந்து காஷ்மீர் மாணவர்களை ஆடைகளை கிழித்து தாக்கியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தொடர்ந்து காஷ்மிர் முஸ்லீம்கள் மீது வட இந்தியாவில் நடக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கத்தினர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: 2வது நாளாக இறங்கிய பங்குச்சந்தை.. !