டிடிவி தினகரனின் சகோதரி மற்றும் மைத்துனருக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
1997-ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் டிடிவி தினகரனின் சகோதரி ஸ்ரீதள தேவி மற்றும் அவரது கணவரும் தினகரனின் மைத்துனருமான பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இவர்கள் குற்றவாளிகள் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2008-ஆம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.68 கோடி சொத்து சேர்த்ததாக கூறி பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகள் சிறையும், ஸ்ரீதள தேவிக்கு 3 ஆண்டுகள் சிறையும் தலா 30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் சரணடையாததால் தற்போது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.