நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக அரசியல் தொடர்பான கருத்துக்கள் கூறி தானும் அரசியலில் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் கமல் விரைவில் தனது அரசியல் கட்சி குறித்து அறிவிக்க உள்ளார்.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என எதிர்பார்த்துகொண்டிருந்த போது நடிகர் கமல் அரசியலில் அவரை விட முன்னதாக வந்துவிடுவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ரஜினியை முந்திக்கொள்ள தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார்.
அதன் முன்னோட்டமாக மையம் விசில் செயலியை அறிமுகப்படுத்தியுள்ள கமல் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் கடந்த 16-ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தான் பிறந்த ஊரில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக கூறியுள்ளார்.
கமல் தனது அறிக்கையில் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி தனது பிறந்த ஊரான ராமநாதபுரத்தில் அதனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகவும், மறைந்த முன்னள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் இந்த அறிப்பை அம்மாவாசை நள்ளிரவில் வெளியிட்டார் கமல்ஹாசன்.
இதனை தற்போது பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். திராவிட அரசியல் நடத்துவேன் என்று கூறும் கடவுள் நம்பிக்கையில்லாத கமல்ஹாசன், எதற்காக நிறைந்த அமாவாசை இரவில் அரசியலுக்கு வரும் அறிவிப்பை வெளியிட வேண்டும்? என கேள்வி எழுப்பியுளார் அவர்.