Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வராக கரூர் கோவிலுக்கு சென்ற தினகரன்? - வீடியோ

முதல்வராக கரூர் கோவிலுக்கு சென்ற தினகரன்? - வீடியோ
, வெள்ளி, 19 ஜனவரி 2018 (16:02 IST)
கரூர் அடுத்துள்ள ஸ்ரீ சற்குரு சதாசிவப்ரஹ்மேந்திராள் கோவிலில் சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு மேற்கொண்டார்.
 ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏவான பின், முதல் முறையாக கரூரில் உள்ள இந்த கோவிலுக்கு வந்து டிடிவி தினகரன் வந்துள்ளார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
 
கரூர் கோவிலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறியது. கட்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதிமுக அம்மா அணி என்பது எங்களுக்கு கிடைக்கும் என நம்புகின்றோம். இதற்காக நீதிமன்றத்தை நாட உள்ளோம். அம்மாவின் உண்மையான விசுவாசிகள் தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்களிடம் உள்ளனர். 
 
அடுத்த கட்டமாக கட்சியை வழிநடத்த வேண்டி உள்ளது. அதிமுக கட்சியையும், சின்னத்தையும் மீட்டெடுப்பதே எனது குறிக்கோளாகும். உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கட்சி, சின்னம் தேவைப்படுகிறது. அதிமுக அம்மா அணி என்பது எங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறோம். 18 எம்எல்ஏக்கள் அதிமுக அம்மா அணியில் சேர முடியாது. அவர்கள் பொதுச்செயலாளரின் தலைமையில் செயல்படுவார்கள் என்றார்.
 
அரசியல் பிரவேசத்தில் பதவி கிடைக்கவும், புகழ் கிடைக்கவும் மகான்கள் ஜீவ சமாதியான இதுபோன்ற இடங்களில்  சிறப்பு வழிபாடு மேற்கொள்வது வழக்கம் என கூறப்படுகிறது.
 
டிடிவி  ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட போது திருவண்ணாமலையில் உள்ள மூக்குப் பொடி சித்தரிடம் தினகரன் ஆசி  பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன பிறகு தற்போது முதல்வராக வேண்டும் என்ற அடிப்படையில் இது போன்ற ஜீவ சமாதி மகான்களின் ஆலயத்தில் வழிபாடு செய்வது வழக்கான ஒன்று எனக்கூறப்படுகிறது.
சி. ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12 வயது சிறுமியை பாலியல் அடிமையாக்கிய பெற்றோர்: அதிர வைக்கும் காரணம்...