ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவுதான் அவர்களுக்கு: நாஞ்சில் சம்பத் தடாலடி!

வெள்ளி, 19 ஜனவரி 2018 (15:19 IST)
தினகரன் அணியில் உள்ள நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஆரல்வாய்மொழியில் பேசினார். அப்போது அவர் தினகரனுக்கு இளஞர்கள் ஆதரவு இருப்பதாக பேசினார்.
 
மதிமுகவில் இருந்து வெளியேறிய நாஞ்சில் சம்பத் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொள்கை பரப்பு செயலாளர் ஆனார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணியில் இருக்கும் நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக உள்ளார்.
 
பொதுக்கூட்டங்கள் போட்டு மேடைதோறும் டிடிவி தினகரன் புகழ் பாடியும், எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தும் வருகிறார். சமூக வலைதளங்களில் அவரை கலாய்த்தாலும், மனம் தளராமல் தொடர்ந்து டிடிவி தினகரனின் தீவிர கொபசெயாக செயல்பட்டு வருகிறார்.
 
இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆரல்வாய்மொழியில் தினகரன் அணி சார்பாக இன்று கொண்டாடப்பட்டது. இதில் பேசிய நாஞ்சில் சம்பத், இப்போதுள்ள இளைஞர்களை ஈர்க்கும் வசீகரம் தினகரனுக்கு மட்டுமே உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜிக்கு கிடைக்காத இளைஞர்கள், 1965-இல் அண்ணாவுக்கு கிடைக்காத இளைஞர்கள், இன்று தினகரனுக்குக் கிடைத்துள்ளனர் என்றார்.
 
மேலும் எங்களுக்கு பலர் மிரட்டல் விடுக்கின்றனர். இதைக்கண்டு அஞ்ச மாட்டோம். தினகரனுக்காக எதையும் இழக்க, நாங்கள் தயாராக இருக்கிறோம். ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவுதான் இன்றைய மத்திய அரசுக்கு ஏற்படும் என நாஞ்சில் சம்பத் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க தடை: உயர் நீதிமன்றம் அதிரடி!