அதிமுக எம்.பி வேட்பாளர்களுக்கு எதிராக முறையீடு! எடப்பாடியார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! - அடுத்தடுத்து பரபரப்பு!

Prasanth K
செவ்வாய், 10 ஜூன் 2025 (10:42 IST)

இன்று மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனை நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் 6 எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய எம்.பிக்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக 2 வேட்பாளர்களை பங்களிக்க முடியும். தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில் இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற உள்ளது.

 

இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என திண்டுக்கல் சூர்யமூர்த்தி என்பவர் தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்ரமணியனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில், இந்த வேட்புமனுக்களை ஏற்க கூடாது என அவர் கோரிக்கை விடுத்த நிலையில், தேர்தல் அதிகாரி அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.

 

இந்நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மர்ம வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக வெடிக்குண்டு நிபுணர்கள் வீட்டை சோதனையிட்ட நிலையில் அது புரளி என தெரிய வந்தது. இந்த மிரட்டலை விடுத்தது யார் என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.பி.யின் கணக்கில் இருந்து திடீரென மாயமான ரூ.57 லட்சம் மோசடி: புகார் அளித்த சில மணிநேரத்தில் நடந்த ட்விஸ்ட்..!

விமான போக்குவரத்து துறைக்கான நிதி முடக்கம்: 1200 விமானங்கள் ஒரே நாளில் ரத்து..!

குழந்தைகளின் மதிய் உணவு தட்டை கூட பாஜக அபகரித்துவிட்டது: ராகுல் காந்தி ஆவேசம்..!

குற்றவாளிகள் குஷி... பீதியில் மக்கள்!. இதுதான் நிலை!.. எடப்பாடி பழனிச்சாமி பாய்ச்சல்!...

கேலி கிண்டலால் பறிபோன உயிர்!... 9 வயது சிறுமி தற்கொலை!.

அடுத்த கட்டுரையில்
Show comments