Publish Date: Fri, 25 Jun 2021 (12:06 IST)
Updated Date: Fri, 25 Jun 2021 (12:07 IST)
அதிமுக உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்து சசிகலாவுடன் தொலைபேசியில் பேசி வருவதல் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. எனினும் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கட்சி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவை கட்சியை காப்பாற்ற வரவேண்டும் என தொண்டர்கள் சிலர் தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்துள்ளனர். இது சம்மந்தமான ஆடியோக்கள் வெளியாகி சசிக்லாவோடு பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இப்போது சசிகலா ஈரோட்டைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரோடு பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் என் தலைமையில் கட்சி செயல்பட்டிருந்தால் நாம் வென்றிருக்கலாம். அம்மா தலைமையில் நாட்டிலேயே மூன்றாவது பெரியக் கட்சியாக இருந்தோம். கொரோனா தொற்று பிரச்சனைகள் முடிந்ததும் நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறியுள்ளார்.
மகேந்திரன்
Publish Date: Fri, 25 Jun 2021 (12:06 IST)
Updated Date: Fri, 25 Jun 2021 (12:07 IST)