Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேலும் 5 அதிமுக நிர்வாகிகள் நீக்கம்… சசிகலாவுடன் பேசியதால் நடவடிக்கை!

Advertiesment
மேலும் 5 அதிமுக நிர்வாகிகள் நீக்கம்… சசிகலாவுடன் பேசியதால் நடவடிக்கை!
, வியாழன், 24 ஜூன் 2021 (12:31 IST)
அதிமுக உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்து சசிகலாவுடன் தொலைபேசியில் பேசி வருவதல் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடந்த நிலையில் எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் நுழைந்தது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சார்பில் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த கூட்டத்தில் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தியைக் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இப்போது அதே குற்றச்சாட்டில் மேலும் 5 பேரை அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. அவர்கள் ஐவரின் பெயர்களையும் வெளியிட்டு கட்சியினர் அவர்களோடு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த A.- ராமகிருஷ்ணன், (போடிநாயக்கன்பட்டி) (மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர்)

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த R. சரவணன் (மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் )

R. சண்முகபிரியா, (மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்)

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திம்மராஜபுரம் திரு. ராஜகோபால்,
( மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் இணைச் செயலாளர்)

திரு. டி. சுந்தர்ராஜ். (தச்சநல்லூர் பகுதி மாணவர் அணி இணைச் செயலாளர்)
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்க் கூட தங்கத்துலதான் போடுவேன்! – உ.பியில் உலா வரும் கோல்டன் பாபா!