திமுக தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு தேர்தலுக்கு பின் ஒரு பேச்சு பேசி நாடகமாடி வருவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைப்பெற்ற சட்டபேரவை கூட்டத்தொடர் நடைப்பெற்றது. இதுத்தொடர்காக செய்தியாளர்களைச் சந்தித்த சட்டபேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலின் போது திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் எதுவும் அறிவிக்கப்பட வில்லை.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதாகவும்.தேர்தல் பரப்புரையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய். கொடுப்பது, பெட்ரோல் ,டீசல் விலைகள் குறைக்கப்படும் என்று கூறியது உள்ளிட்டவைகள் எதுவும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்படாதது தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு தேர்தலுக்கு பின் ஒரு பேச்சு என திமுகவின் இரட்டை மனதைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.