நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

Mahendran
வியாழன், 20 நவம்பர் 2025 (17:30 IST)
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் இரண்டு அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
முதலாவது காற்றழுத்த தாழ்வு நவம்பர் 22-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு உருவாகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 24-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு பிறகு, நவம்பர் 27 ஆம் தேதி வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மேலும் வலுவடைந்து ஆந்திர கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
 
இந்த தொடர்ச்சியான வானிலை மாற்றங்களால், நாளை  முதல் அடுத்த ஆறு நாள்களுக்குத் தமிழகத்தில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments