வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

Mahendran
வியாழன், 20 நவம்பர் 2025 (17:16 IST)
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது பயன்படுத்தப்படும் எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்வதில் ஏற்படும் சிரமங்களை தீர்க்க, இளைஞர் அப்பாஸ் என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஓர் இணையதளத்தை உருவாக்கியுள்ளார்.
 
எஸ்ஐஆர் படிவத்தில் தேவையான தகவல்களை கண்டுபிடித்து பூர்த்தி செய்வதில் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் சந்திக்கும் சிரமங்களுக்கு இந்த ஏஐ இணையதளம் தீர்வாக அமையும். வாக்காளர் பெயர், பாகம் எண் போன்ற விவரங்களை கொடுத்தால், ஏஐ தொழில்நுட்பம் மூலம் அந்த வாக்காளர் தொடர்பான தகவல்களை பெற்று படிவத்தை பூர்த்தி செய்ய இது உதவுகிறது.
 
தற்போது சென்னை ஆர்.கே. நகரில் உள்ள ஒரு வார்டில் இதை செயல்படுத்தி வரும் அப்பாஸ், தமிழ்நாடு அரசும் தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்தால், இந்த தொழில்நுட்பத்தை மாநிலம் முழுவதும் உள்ள 6 கோடி வாக்காளர்களுக்கும் பயன்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 
இந்த முயற்சி, வாக்காளர் பதிவு நடைமுறையை எளிதாக்கி, மின்னணு ஆளுகையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments