Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Advertiesment
Udhayanithi Annamalai

Prasanth Karthick

, வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (15:56 IST)

திமுகவிற்கு எதிராக Get Out Stalin என்ற ஹேஷ்டேகை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொடங்கிய நிலையில் அது உலக அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

 

தமிழக பாஜக - திமுக இடையேயான சமீபத்திய மோதல் போக்கு பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இரு கட்சிகளுக்கு இடையேயும் ஹேஷ்டேக் மோதல் இன்று தொடங்கியது. நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நாளை காலை 6 மணி முதல் தான் GetOutStalin என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்யப் போவதாகவும் 24 மணி நேரத்திற்குள் யார் ஹேஷ்டேக் அதிகம் ட்ரெண்ட் ஆகிறது, யாரை மக்கள் ஆதரிக்கிறார்கள் என பார்க்கலாம் என சவால் விட்டிருந்தார்.

 

இந்நிலையில் திமுகவினர் Get Out Modi என்ற ஹேஷ்டேகை நேற்று மாலை முதலே ட்ரெண்ட் செய்து வந்தனர். இன்று காலை 6 மணி முதலாக திமுகவிற்கு எதிராக பாஜக Get Out Stalin என்ற ஹேஷ்டேகை தொடர்ந்து ட்ரெண்ட் செய்து வருகிறது. வேகவேகமாக இதன் ட்ரெண்டிங் அதிகரித்த நிலையில் தற்போது இந்த ஹேஷ்டேக் 1.07 மில்லியன் பகிர்தலை தாண்டி உலக அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

 

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பேசி வரும் பாஜகவினர், தமிழ்நாட்டில் திமுக மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை இந்த ட்ரெண்டிங் பிரதிபலிப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் திமுகவினரும் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக Get Out Modi ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். எனினும் அது எக்ஸ் தளத்தின் ட்ரெண்டிங்கில் இடம்பெறவில்லை.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ளத்தில் தமிழ் உலகிற்கு ஆங்கிலம்.. இரு மொழி கொள்கையால் வெல்வோம்.. ஈபிஎஸ்